செரிமானம் சிறப்பான முறையில் நடைபெற உதவும் கருஞ்சீரகம் !!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:23 IST)
நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.


வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்.

கருஞ்சீரகம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. கொழுப்பு சம்பந்தப்பட்ட வியாதி ஏற்படாமல் இருக்கக் கருஞ்சீரகம் வியக்க வைக்கும் வகையில் உதவுகின்றது.

கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள், கொப்பளங்கள், புண்கள் மறையும். பருக்கள், கொப்பளங்கள், புண்கள் மறையும்.

நிறைய பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு முடி அதிகமாக கொட்டுகின்றது. இவர்கள் கருஞ்சீரக விதை எண்ணெய்யைத் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் தலைமுடி கொட்டும் பிரச்சனை சரியாகி முடி நன்றாக வளர்ச்சி அடையும்.

கருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் நின்று விடும். இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது. தினம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம் பொடியைக் கலந்து அருந்தலாம்.

கருஞ்சீரகத்தை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்