சளி தொந்தரவுகளை முற்றிலும் நீக்கும் கற்பூரவள்ளி இலை !!

சனி, 12 பிப்ரவரி 2022 (10:22 IST)
கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.


கற்பூரவள்ளி இலையில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன.

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்றவை ஏற்பட்டால் கற்பூரவள்ளி இலைகளை நன்றாக பிழிந்து சாற்றை எடுத்து சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகள் குறையும்.

கற்பூரவள்ளி இலை சாற்றை தொண்டையில் படுமாறு அருந்த வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் ப்ரீ ராடிக்கல்ஸ்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து சிறுவயதில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்