கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று பார்த்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, தசைசத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன.
கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும்.
கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. வாரம் இரண்டு முறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் குணமாகும்.