தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது என மருத்துவ ஆவிகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன.
உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படுகின்றன. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிடுபவர்களுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.