நரம்புத்தளர்ச்சியை போக்கி மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் கரிசலாங்கண்ணி !!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (12:01 IST)
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலின் மினுமினுப்பு அதிகரிக்கும். 

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நரை, மூப்பு ஏற்படுவது தள்ளி போகும். மேலும் கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்ச்சியை போக்கி மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அடைய செய்யும்.
 
ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காச நோய்கள் குணமாகும், மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் தீரும்.
 
கரிசலாங்கண்ணி கீரை இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் மண்ணீரல், மற்றும் சிறுநீரகத்தைப் பலமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.
 
ஆரம்ப நிலையில் உள்ள மனநோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை தான் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.
 
அடிக்கடி கருசிதைவு பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் கரிசலாங்கண்ணிச் சாற்றையும் பசும் பாலையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்