அதிக மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி பூ !!

Webdunia
செம்பருத்தி பூ மிகவும் அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் இரண்டு வகைகள் உள்ளது. ஒரு வகைப் பூக்கள் அடுக்கடுக்காக காட்சியளிக்கும். மற்றொரு வகை தனித்தனியாக அகலமாக காட்சியளிக்கும். இதுதான் மருத்துவரீதியில் சிறந்தது.

வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி ஐந்து பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு வயிற்று வந்தால் புண்கள் குணமாகும்.
 
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் மிருதுவாக ஆகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்தி பூ சிறந்த மருந்து.
 
ஐந்து அல்லது பத்து செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் வெகு விரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகவும்.
 
துவர்ப்பு சுவை கொண்ட செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியினை கொடுக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக ஆகும்.
 
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலைவலி, மயக்கம் போன்றவை குறையும். உடலில் ஏற்படும் சோர்வும் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும், உடல் பளபளப்பாகும்.
 
வெள்ளைபடுதல் குணமாக தினமும் ஐந்து செம்பருத்தி பூ இதழ்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். பொதுவாக பெண்கள் தினமும் ஐந்து பூக்களை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை, இரத்த சோகை, பலவீனம், மூட்டுவலி, இடுப்பு வலி, மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும், பெண்மையும் வளரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்