செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும் உருளைக்கிழங்கு !!

வைட்டமின் எ, வைடமின் பி முதலியனவையும் உள்ளன. சோடா உப்பு மற்றும் பொட்டாசியம் ஆகிவை இதில் அதிக அளவில் உள்ளன.

சாதாரண அளவில் ஒரு உருளைக்கிழங்கில் மூன்று புள்ளி இரண்டு கிராம் அளவு கூட புரதச்சத்து கிடைக்கிறது. உருளைக்கிழங்கில் கார்போஹைடிரேட் அதிகம் இருப்பதால் அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
 
உருளைக்கிழங்கு தோல்லுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். அதனால் நோயாளிகள் குழந்தைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது .
 
இதில் வைட்டமின் சி , வைடமன் பி மற்றும் பொட்டாசியம் மெக்னிசியயம் பாஸ்பரஸ், ஜிங் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. பச்சை உருளக்கிழங்கை அரைத்து எடுத்து அதனை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது சருமத்தில் உள்ள சிறு சிறு புள்ளிகள் மற்றும் பருவினை குணப்படுத்தும்.
 
உருளைக் கிழங்கின் சாறை எரிக்காயம் , சிராய்ப்புகள் , சூழலுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம். உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு வீங்குவதனையும் தடுக்கிறது. இரைப்பைகைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதனை முன்கூட்டியே தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவற்றில் நச்சு நீர் தேங்குவதையும் தடுக்கிறது.
 
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயை குணப்படுத்தும். உருளைக்கிழங்கு வாய்ப்புண் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவு இருக்கும். பச்சை உருளைக்கிழங்கை அரைத்து வாய்ப்புண்களின் மேல் தடவினால் வாய்ப்புண் குணமடையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்