திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. திணை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும். மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவதற்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. அதனால் இரும்புச்சத்து நிறைந்த தினை உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்காமல் தடுக்கிறது.
திணையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது. திணை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.
நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் திணை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
திணை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும்.