கத்திரிக்காய் நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட நன்மை தரக்கூடிய கத்தரிக்காயை பலரும் உணவில் சேர்த்து கொள்வதில்லை. அனால் கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும்.