2, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.
3, கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
4, டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.
5, சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை கால, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.
6, தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.
7, ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும்.
8. நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்.