தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவும் இஞ்சி !!

Webdunia
செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வது பித்தப்பை பித்தத்தை வெளிப்படுத்த மற்றும் செரிமானத்தை தூண்டி விட  உதவும்.

ஜலதோஷத்தின் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
 
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
 
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் ஜீரணத்தை துரிதப்படுத்துவது ஆகும்.
 
பல விதமான புற்றுநோய் செல்களை அதாவது நுரையீரல், கருப்பை, புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இஞ்சியில் நிறைந்து உள்ளது.
 
மாதவிடாய் காலங்களில் சில பெண்களில் ஏற்படும் மாதவிடாய் வயிற்றுப்பிடிப்பு வலியை குறைக்க, மாதவிடாய் காலத்தின் முற்பகுதியில் இஞ்சியை உட்கொள்ளலாம். நாட்டுச்சர்க்கரை சேர்த்த இஞ்சி தேநீர் பருகுவது மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிற்றுப்பிடிப்பு வலிகளை குணப்படுத்த உதவும்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்