தினம் ஒரு முட்டை சாப்பிடுகிறீர்களா? கட்டாயம் இதை படியுங்கள்...!

Webdunia
முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும்  உள்ளது.
 
உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி முட்டையில் உள்ளது. எனவே  தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
 
முட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
 
ஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம். அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2  சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
வயதானபோது ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது. முட்டையானது விட்டமின் ஏ, லடீன், ஸீஸாக்தைன் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.
 
முட்டையை தேர்வு செய்யும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில்  போடும்போது மிதந்தால் அது கெட்டது என்பதை அறியலாம்.
 
ஆரோக்கியமான உணவினை உண்டு இயற்கை சூழலில் வாழும் கோழியிலிருந்து பெறப்படும் முட்டையே அதிக சத்துக்களை உடையது. ஆதலால் இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதே சிறந்தது. குறைந்த விலையில் விலைமதிப்பில்லா  ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வது பயன் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்