பியூட்டி பார்லர் தேவையில்லை - முகத்திலுள்ள சுருக்கத்தை நீக்கும் கற்றாழை....!

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (11:39 IST)
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால  மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வந்தால் நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.
 
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள்  மற்றும் பொடுகை நீக்குகிறது.
 
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு  செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


 
இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்.
 
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும்  நிறைந்தது இச்சாறு.
 
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள  சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
 
கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்