அசைவ சாப்பாடடில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவாகும்.
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
மீனை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும். அதுமட்டுமின்றி உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும்
ஒமிகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.கெட்ட கொழுப்புகளை குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொழுப்புக்கள் சேர்வதையும் தடுக்கிறது.
மீனில் ஒமிகா 3 அமிலம் அதிகமாக உள்ளதால் கண்ணிற்கு நல்லது. முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடலை நன்கு ஒல்லியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது.
பெண்கள் மீனை அதிக அளவில் சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.