ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் வேர்க்கடலை !!

வியாழன், 20 ஜனவரி 2022 (13:50 IST)
வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், முதலிய நட்ஸ் வகைகளை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.


வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், முதலிய நட்ஸ் வகைகளை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.

100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது. இது உடல், தசை மற்றும் முடியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது.

வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினெரல்ஸ் அதிகம் உள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும்.

வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய உதவியாக இருப்பது புரதச்சத்து ஆகும். குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. முக்கியமாக இதனை அவித்து உண்ணும்போது ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சக்தி இன்னும் பெருகுகின்றது.

வேர்க்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.மேலும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்