பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதேவேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோய்க்கும் இது நல்லது.
சருமம், கல்லீரல், சிறுநீரகம், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செரிமானம் துரிதமாக நடைபெறவும் வழிவகை செய்யும். காய்ச்சலையும் குணப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் மூலக் கூறுகள் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமலும் பார்த்துக்கொள்ளும்.
குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டுவர ரத்த சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பைத் துரிதப்படுத்துகிறது.
கருஞ்சீரகம் 250 கிராம், வெந்தயம் 250 கிராம் மற்றும் ஓமம் 250 கிராம் இவற்றை எல்லாம் சம அளவு எடுத்து நன்கு தூள் செய்து கொள்ளவேண்டும்.
இந்த பொடியை தினமும் 1 லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். அந்த நீரை தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் மற்றும் மாலை 1 டம்ளர் குடிக்கவும்.
இந்த நீரை குடித்த அடுத்த 2 மணி நேரத்துக்கு தண்ணீரை தவிர வேறு எந்த உணவும் சாப்பிட கூடாது. இப்படி செய்து குடித்து வந்தால் சக்கரை நோயிலிருந்து பாதுகாக்கலாம்.