உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைக்க உதவும் சப்ஜா விதைகள் !!
சனி, 9 ஏப்ரல் 2022 (18:13 IST)
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க சப்ஜா விதைகள் உதவுகின்றன.
இதய நோய் உள்ளவர்கள் சப்ஜா விதையை எடுத்துக்கொள்வதன் மூலம் பெரும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சிறுநீர் செல்லும் இடத்தில் ஏற்படும் புண்கள், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. புண்களை குணமாக்கும்.
வாய் கேன்சர் உள்ளவர்கள் சப்ஜா விதைகளை எடுத்துக்கொண்டால் வாய் கேன்சர் நோய் உள்ளவர்களுக்கு பூரண பலனளிக்கிறது. அதுமட்டுமின்றி, மௌத் பிரெஷ்னேராகவும் பயன்படுத்தப்படுகிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டால் கொலெஸ்ட்ராளின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வயிற்றுப் புண்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது சப்ஜா விதைகள்.
தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து அழகிய தோற்றத்தை தருகிறது சப்ஜா விதை. பல்வேறு மினரல்கள் இருப்பதால் பொலிவான தோற்றத்தை தருகிறது. மூலநோய் உள்ளவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் விரைவில் சரியாகும்.