முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.
சிலிகான், சல்பர் சத்துக்கள் , வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், ஐயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற மினரல்ஸ் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன.
முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி, சல்பர் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது. முட்டைக்கோஸில் உள்ள "இண்டோல் 3 கார்பனைல்" என்ற சத்து, கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.