நுரையீரலை பாதுகாக்க உதவும் முக்கிய வைட்டமின்கள் எது தெரியுமா...?

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (11:01 IST)
நுரையீரலை பாதுகாக்க மிகவும் முக்கியமானது வைட்டமின் ஏ. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள செல்களை செழிப்பாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.


வைட்டமின் ஏ-வை அதிகம் எடுப்பதன் மூலம் நுரையீரலை பலப்படுத்த முடியும். வைட்டமின் ஏ-வை பெற அதிக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாகவே நமது உடலில் வைட்டமின் ஏ சேகரிக்கப்பட்டு இருக்கும். அதேநேரம் அளவுக்கு அதிகமாகவும் வைட்டமின் ஏ-வை எடுத்துக் கொள்ளக் கூடாது. பால் பொருட்கள், மீன், செரல்ஸ், கேரட், பிரகோலி, கீரை உள்ளிட்டவற்றில் வைட்டன் ஏ இருக்கும்.

வைட்டமின் சி நமது நுரையீரலை பலவழிகளில் பாதுகாக்கும். தேவையான அளவுக்கு அதை எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நமது தோலும் பொலிவு பெரும்.

சிட்ரிக் பழங்களில் உள்ள வைட்டமின் சி நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும். அதோடு புதிய திசுக்களும் உண்டாகும். சிட்ரிக் பழங்கள், சிகப்பு மிளகாய், கொய்யா, கிவி, பிரகோலி, பெர்ரி பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் வைட்டமின் டி நமது சுவாசப்பிரச்னைகளை எதிர்த்து போராடுகிறது. வைட்டமின் டி சத்து குறைந்தால், மூச்சுக்குழாயில் பிரச்னை ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரலை நன்றாக இயக்க உதவும் இந்த வைட்டமின் டி பெருமளவு சூரிய ஒளியில் இருந்து தான் கிடைக்கும். முட்டை, மீன் உள்ளிட்டவற்றிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்