பார்லி நீரின் அற்புதமான நன்மைகள் என்ன தெரியுமா...?

Webdunia
குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு.


உடல்நலம்  சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. 
 
மற்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைத் தவிர, பார்லி நார்ச்சத்து, மெக்னீசியம், செலினியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது கொழுப்பை சரியான முறையில் ஜீரணிக்க உதவுகிறது. அதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறது.
 
பார்லி நீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பார்லி நீர் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
 
நம் உடலிலுள்ள நிணநீர் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணம். அது அடைக்கப்பட்டால் உடலில் தண்ணீர் தேங்கிவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.
 
கோடை காலத்தில் நமது குடல் அதிகபட்ச வெப்பத்தை தாங்குகிறது. குடல் ஆரோக்கியமற்றதாக இருந்தால் சிக்கல் தான். அதனால்தான் வாரத்திற்கு இரண்டு  முறையாவது பார்லி தண்ணீரைக் குடிப்பது அவசியம்.
 
பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மிகவும் கடினம் எனக் கருதுபவர்கள் பார்லி தண்ணீரை குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்