கேழ்வரகில் உள்ள அபரிமிதமான சத்துக்கள் எவை தெரியுமா...?

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (17:47 IST)
கேழ்வரகில் சில முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது தாவர அடிப்படையிலான உயர் தர புரத சத்தின் சிறந்த மூலமாகும்.


முளை விட்ட கேழ்வரகு காலையில் உட்கொள்வது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது.

கேழ்வரகில் உள்ள அபரிமிதமான இரும்பு மற்றும் கால்சியம் உள்ளடக்கம் காரணமாக, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை போக்கும். ராகி இரும்பின் சத்தின் சிறந்த மூலமாகும். இது இரத்த சோகையை போக்குகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது  ராகியில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் முற்றிலும் இல்லை. எனவே ராகி மாவால் செய்யப்படும் உணவுகள் இதய நோயாளிகளுக்கு பாதுகாப்பானவை.

கேழ்வரகில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி3 அல்லது நியாசின் நல்ல எச்டிஎல் அளவை அதிகரிக்கவும் மோசமான எல்டிஎல் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்