உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறதா சீரகத்தண்ணீர் !!

சனி, 9 ஏப்ரல் 2022 (16:19 IST)
சீரகத்தண்ணீர் குடித்து வருவது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.


சீரகத்தண்ணீரில், உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டி நன்றாக சுரக்க செய்து உணவை திறம்பட ஜீரணிக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இது வாயு சம்பந்தமான வயிற்று வலிக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.

ஜீரா நீரில் உள்ள தைமோகுவினோன் என்ற சக்திவாய்ந்த பொருள் கல்லீரலை வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கல்லீரல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சீரகத் தண்ணீரில் இயற்கையாகவே பசியை அடக்கும் பண்பு உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை குறைக்கலாம்.

சீரகத் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப் படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சீரகத் தண்ணீர் குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்