வயிற்று பிரச்சினைகளுக்கு விரைவில் நிவாரணம் தரும் வசம்பு !!

சனி, 9 ஏப்ரல் 2022 (14:27 IST)
வசம்பு சுட்ட சாம்பலுடன் தேன் கூட்டிக் குழைத்து உள்ளுக்குக் கொடுத்து விட்டு, வசம்புச் சுட்டக் கரியை நீர் விட்டு உரசி எடுத்து வயிற்றில் கனமாகப் பூசி விட்டால் வயிற்று வலி குணமாகும்.


வசம்பைச் சுட்டுக் கரியாக்கி, தூள் செய்து சிட்டிகையளவு எடுத்து, முசுக்கைச்சாறு நான்கு துளி விட்டுக் கலக்கிக் காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை தொடர்ந்து கொடுத்து வந்தால் கக்குவான் குணமாகும்.

வசம்பைத் தூள் செய்து, அத்துடன் வெங்காயத் தோலையும் சேர்த்து நெருப்பில் போட்டு, சாம்பிராணி போல புகை போட்டால் கொசு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும்.

குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்