நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த முந்திரி பழம்...!

Webdunia
முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமான சத்துக்கள் ஒரு முந்திரி பழத்தில் உள்ளது. இதில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.
 
முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைப்பாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
 
முந்திரி பருப்பில் நார்ச்சத்து வைட்டமின்கல், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும். இதில் இதயத்திற்கு  நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோயிக் அமிலங்கள் அதிக அலவில் காணப்படுகிறது.
 
முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்சனைகள் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்