செரிமானத்தை எளிதாக்க உதவும் சிறுதானியங்கள்....!

நமது முன்னோர்கள் சிறுதானியங்களை முதன்மை உணவாக உண்டுள்ளனர் என்பதற்கு தமிழரின் சங்க இலக்கியங்களே பெரிய உதாரணம் ஆகும். சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது.
சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மாற்றும் தாவர ஊட்டச்ச சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து  க்கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கும்.
 
சிறுதானியங்களில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 15 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’,  வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்க்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாராமாக விளங்குகின்றது.
 
தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற் சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. மேலும் இது ஆஸ்த்துமா மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.
 
சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. 
 
சிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக்  கட்டுப்படுத்த உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்