செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் முட்டைக்கோஸ் !!

Webdunia
ஒரு கப் நிறைய முட்டைக்கோஸ் சாப்பிட்டாலே உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும். இது நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

முட்டைக்கோஸில் உள்ள குளுடைமின் எனப்படும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
 
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல நச்சுக் கழிவுகள் நமது உடல் உறுப்புகளை சேர்ந்து கொள்கின்றன. வாரத்திற்கு ஒரு முறையாவது முட்டைகோஸ் உணவில் சேர்த்து நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அறவே நீங்கும்.
 
முட்டைக்கோசில் லாப்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நோய் தொற்றுகளை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று இளம் வயதினருக்கு உள்ள ஒரு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம்.
 
முட்டைக்கோசை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும். மேலும் ரத்தம் உறைந்து போவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது.
 
அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோசை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமாகும். ஏனென்றால், இதில் அல்சரரை குணப்படுத்தும் பூளுட்டோமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
 
கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் அமிலம் அவசியமான ஒன்றாகும். முட்டைகோசில் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்பார்வை கோளாறுகளை போக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்