வாழைப்பழமானது மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றது. மேலும் வாழைப்பழமானது உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதாகவும், எலும்புகளை வலுப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் வாழைப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினைக் கட்டுக்குள் வைப்பதாகவும் உள்ளது.
வாழைப்பழத்தினை சர்க்கரை நோய் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம், நரம்பு சம்பந்தப்பட்ட தளர்ச்சி, அழற்சி என்ற பிரச்சினை உள்ளவர்களும் சரி செய்து கொள்ள உதவுகின்றது. மேலும் வாழைப்பழம் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளது.