குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!

Webdunia
பாதாம் பருப்புகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும்.  மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.
பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில் கலந்து தினமும் பருகுவதால் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தின் அளவு அதிகமாக சேரும். பாதாம் பருப்பில்  உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது.
 
பாதாம் கலந்த பாலை பருகுவதால் குழந்தையின் எலும்புகள் வலுவடைகின்றன. இந்த பாலின் மூலம் குழந்தைக்குக் கூடுதலாக வைட்டமின் டி சத்து  கிடைக்கின்றது விட்டமின் டி சத்து கிடைக்கப்பெறுவதால் குழந்தையின் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து எளிதில் சென்று சேருகிறது. 
பாதாமில் நிறைந்துள்ள விட்டமின் ஏ சத்து கண்களின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்குக் கண் சம்பந்தமான  குறைபாடுகள் ஏற்படாது. கண் பார்வை கூர்மை அடையும்.
 
பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ சத்தானது சருமம் சம்பந்த நோய்கள் ஏற்படாமல் காப்பாற்றும். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். சருமத்தில் ஏற்படும் புண்கள் ,கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யப் பாதாம் பருப்புகள் உதவும்.
 
பாதாம் பருப்பை இரவு நேரத்தில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள், பின் அதன் தோலை உரித்து, காய விடுங்கள். பிறகு இதனைக் குழந்தைகளுக்குச்  சாப்பிடக் கொடுங்கள்.
 
ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குத் தரப் பாதாம் பருப்புகளை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம்.இந்தப் பொடியைக் குழந்தைகளின் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்.சற்று பெரிய குழந்தை என்றால் சின்ன சின்ன துண்டுகளாகப் பாதாம் பருப்புகளை வெட்டி சாப்பிடக் கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்