சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத உணவுமுறைகள் என்ன...?

சர்க்கரை நோய் அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது சக்கரை நோய் வருவதற்கான ஒரு வகை அறிகுறியாகும். அதே போல திடீரென  அடிக்கடி அதிக அளவு பசி மற்றும் தாகம் ஏற்படுவதும் சக்கரை நோய்க்கான அறிகுறியாகும்.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்னி, பசலை கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, புதினா, கொத்துமல்லி,  முருங்கைக்கீரை.
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகள்: பூசணிக்காய், பப்பாளிக்காய், புடலங்காய், நெல்லிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெண்டைக்காய், கோவக்காய்,  பாகற்காய், சௌ சௌ, அவரைக்காய், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், வாழைப்பூ.
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய தானியங்கள்: கேழ்வரகு, கோதுமை, கம்பு, பார்லி, சோளம், கொள்ளு, கொண்டைக்கடலை, வெந்தயம், பச்சை பட்டாணி,  சோயா பீன்ஸ்.
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய பழங்கள்: அத்திப்பழம், தர்பூசணி, அன்னாசி, எலுமிச்சை, தக்காளி, மாதுளை, கொய்யாப்பழம், ஆப்பிள், நாவல், ஆரஞ்சு,  சாத்துக்குடி.
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடகூடாத உணவுகள்:
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத கிழங்கு வகைகள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிகாய் ஆகியவை உணவில் சேர்க்க கூடாது.
 
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத பழங்கள் அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டாப்பழம், தர்பூசணி, பேரிட்சை ஆகிய பழங்களை  சாப்பிடகூடாது.
 
எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், கேக் வகைகள் மற்றும் சுவிட்ஸ் ஆகியவை சாப்பிடகூடாது. மேலும் ஆட்டுக்கறி,  மாடுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடக்கூடாது. தின்பண்டங்கள். சர்க்கரை, வெல்லம், இனிப்புப் பலகாரங்கள், சிப்ஸ்,  வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொறித்த பலகாரங்களை சாப்பிடக்கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்