தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (16:16 IST)
தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே இருக்கும் நோய்களை இருந்த இடம் தெரியாமல் வெளியேற்றும்.


தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளித்தால் உடலில் உள்ள உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.

சிறுநீரகங்களில் அதிகம் உப்பு சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்