சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் ஆரஞ்சு பழத்தோல் !!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (14:56 IST)
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தில் உள்ள நுண்துளைகள் மூலமாக உள்நுழைந்து இறந்த செல்களை வெளியேற்றுவதில் ஆரஞ்சு பழத் தோலின் பங்கு மிகப் பெரியது.


ஆரஞ்சு பழத் தோலில் அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறையவே உள்ளன. இதனால், முகத்தில் உள்ள அழற்சிகள் நீங்கி சுத்தமான தோல் பகுதி உருவாகிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தில் உள்ள நுண்துளைகள் மூலமாக உள்நுழைந்து இறந்த செல்களை வெளியேற்றுவதில் ஆரஞ்சு பழத் தோலின் பங்கு மிகப் பெரியது.

ஆரஞ்சு பழத் தோலில் சிட்ரிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் சுவடுகள் மறந்து உங்கள் சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாறும்.

ஆரஞ்சி தோல் முழுவதும் வைட்டமின் பி6, கால்சியம், புரோவிட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. ஆரஞ்சு பழத்தோலில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிற்று நோயை குணப்படுத்துகிறது.

ஆரஞ்சுப் பழத்தோலில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும். ஆரஞ்சு பழத்தோலிலுள்ள நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்குகிறது.

ஆரஞ்சுப் பழத்தோலிற்கு முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆற்றலும், இளமையுடன் வைத்துக்கொள்ளும் சக்தியும் உண்டு. முகப்பரு, கீரல், பரு தடையங்கள், திட்டுக்கள் என முகத்தில் எது இருந்தாலும் நீக்கிவிடும். ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் கிருமிகள், இறந்த செல்களால் சரும சேதாரத்தையும் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்