மாதுளம்பழ பானத்தினை அருந்துவதனால் கிடைக்கும் நன்மைகள்..!!

Webdunia
பழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழ பானத்தைப் பருகுவதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது.

இதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன், போலேற் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதற்கு உதவுகின்றது.
 
மாதுளம் பழத்தில் காணப்படும் விட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. இந்தப் பானத்தைப் பருகுவதனால் சருமம் வயதடைவதைத் தடுத்து  புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. மேலும் இது சருமச் சுருக்கங்களைப் போக்குவதுடன் பருக்கள் போன்ற சருமப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவுகின்றது.
 
மாதுளம்பழப் பானத்தை அருந்துவதனால் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் முடிகளின் வேர்களை வலிமைப்படுத்தும். இதனால் முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான ஆரோக்கியமான முடியினைப் பெற முடியும்.
 
இந்தப் பானம் பருகுவதனால் பற்களின் மீது படலங்கல் தோன்றுவதைத் தடுக்க முடியும். இது மவுத் வோஸ்களை விட சிறந்த தீர்வைத் தரக் கூடியது. இதனால் பற்களின் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.
 
மாதுளம்பழப் பானத்தை அதிக அளவு வைட்டமின் சி இருப்பதனால் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், அதனால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கும். மாதுளம்பழத்தில் காணப்படும் நார்ப் பொருட்கள் சமிபாட்டு செயற்பாட்டை சீராக நடை பெற உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்