கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல். உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் 15 நிமிடம் சிரிப்பு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 10, 20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம். வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.