வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:43 IST)
நெஞ்சு எரிச்சலை குணமாக்குகிறது. அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் கஷ்டப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அமில தன்மையை சமன் செய்து விரைவாக நெஞ்செரிச்சலை குணமாக்குகிறது.


நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வாழைத்தண்டு கட்டுப்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோய்களோ வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடலின் செல்களில் இருக்கிற கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

 பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுபடுத்த உதவுகிறது.மேலும் பெண்களின் உடல் பலம் பெரும். மேலும் இந்த வாழைத்தண்டானது வயிற்றில் உள்ள புண்களை குணமாக்க உதவுகின்றது.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்