நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை மீட்டு தரும் துரியன் பழம் !!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:11 IST)
பழுக்காத துரியன் காய்கறிகள் போல் வேகவைத்து உண்ணப்படுகிறது. துரியன் பழத்தைக் கொண்டு கேக், பழவகை இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. துரியன் பழம் சத்துக்கள் செறிந்தது.


பொதுவாகவே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் துரியன். அதாவது அதில் வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் முதலியன உள்ளன.

நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை மீட்டு தருவதற்கு டானிக்காக துரியன் பழம் உதவுகிறது.

துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கும். இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது.

துரியனில் உள்ள வேதிப்பொருள் மன அழுத்தம் மனச்சோர்வு, தூக்கமின்மை போக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்