சென்னை உட்பட முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்! எக்ஸ்டன்ஷன் வசதியும் உண்டு..!

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (07:38 IST)
இந்தியாவில் Zoom போன் சேவை அளிக்க கடந்த ஆண்டு இந்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தற்போது சென்னை உள்பட முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு Zoom வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம் அறிமுகம் செய்த நிலையில், அதன் மூலம் மீட்டிங், சாட் மற்றும் குரல் அழைப்பு பயன்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் போது, பள்ளி, கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு Zoom சேவை மிகவும் அவசியமாகவும், பயன்பாடாகவும் இருந்தது என்பதை தெரிந்தது.

இந்த நிலையில், தற்போது Zoom போன் சேவை இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக இந்த சேவை புனே நகருக்கு கிடைக்கும் என்றும், இதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்றும் Zoom நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆட் ஆன் முறையில் இதை கட்டண முறையில் சந்தா செலுத்தி பயன்படுத்த முடியும் என்றும், மாதாந்திர மற்றும் வாராந்திர கட்டணத்தை செலுத்தினால் கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்றும், Zoom தளத்திலிருந்து தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு இது மிகவும் பயன்தரும் என்றும், குறிப்பாக இதில் எக்ஸ்டென்ஷன் வசதியும் இருப்பதால், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுடன் ஒரே நேரத்தில் எளிதில் இணைந்து தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்