ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு..!

Siva

புதன், 9 அக்டோபர் 2024 (07:21 IST)
முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், இந்தியாவிடம் கேட்டதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் வங்கதேசத்தின் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், திடீரென வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் என்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து அவர் லண்டனுக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வங்கதேச முன்னாள் பிரதமர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு இதுகுறித்து இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசிடம் கேட்டதாகவும், ஆனால் இரு நாடுகளிடமிருந்து உரிய பதில்கள் கிடைக்கவில்லை என்றும், எனவே முன்னாள் பிரதமர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தொஹித் ஹொசைன் தெரிவித்துள்ளார். இதனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்