ராமருக்கு மட்டும் தான் கோவிலா? ஜெயன் மோகனுக்கு கோவில் கட்டும் அபிமானி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (17:33 IST)
ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. 
 
நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதை பார்த்துள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் பணியினை அக்கட்சியை சேர்ந்தவர் துவங்கியுள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. 
 
இது குறித்து கோவில் கட்டவுள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோபாலபுரம் தொகுதி எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ் தெரிவித்தாவது, முதல்வர் ஜெகன்மோகன் நலத்திட்டங்களை வருங்கால தலைமறையினரும் நினைவு கூறும் விதமாக அவரை ஒரு கடவுளாக கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கோயில் கட்டப்படுகிறது. 
 
ஒய்.எஸ். குடும்பத்தினர் மக்களுக்கு சேவை செய்வதற்காக பிறந்துள்ளனர். இதற்காகதான் கடவுள் அந்த குடும்பத்தை பூமிக்கு அனுப்பியுள்ளார். எனவே எந்தவொரு தீய சக்திகளும் முதல்வர் ஜெகன்மோகனை நெருங்காமல் தடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு கோயில் கட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்