உத்திரபிரதேசத்தில் அருண்குமார் என்ற வாலிபருக்கு சிறுவயதில் இருந்தே 4 கால்கள் இருந்துள்ளது. சிறுவயதில் வளர்ச்சி அடையாத கால்கள் தற்போது வளர்ந்து உள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்களை அணுகி வருகிறார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் அருண்குமார்(22) என்ற வாலிபர் பிறக்கும் போதே 4 கால்களுடன் பிறந்துள்ளார். இந்த பிரச்சணை குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து புதுடெல்லியில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் இருந்து அணுயுள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் மருத்துவமனைக்கு சென்றவுடன் என் உடலை பரிசோதனை செய்தனர். சீக்கிரம் ஆப்ரேஷன் நடந்து என் இரு கால்களும் அகற்றப்படும் நானும் எல்லோரும் போல வாழுவேன் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே அருண்குமாரை சோதனை செய்த மருத்துவர்கள் கூறியதாவது:-
அவருக்கு நான்கு கால்கள் உள்ளதால் இரத்த ஓட்டம் எங்கிருந்து பாய்கிறது என பரிசோதித்து வருகிறோம். மேலும் அவருக்கு கூடுதலான சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை இருக்கிறதா எனவும் பார்த்து வருகிறோம். அதன் பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கூறமுடியும் என்றனர்.