இந்திரா காந்தி போல் முதல்வர் மம்தாவை கொலை செய்ய வேண்டும்: இன்ஸ்டாவில் பதிவு செய்த இளைஞர்

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (16:02 IST)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டு கொலை செய்ய வேண்டும் என இன்ஸ்டாவில் பதிவு செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி மீது இறந்த மாணவியின் பெற்றோர்களே குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிகாம் படிக்கும் இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்