திருட சென்ற இடத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த திருடன்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:16 IST)
திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் வீட்டிலிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.


 
 
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் கடந்த 26-ஆம் தேதி இரவு நுழைந்த திருடன் நகை, பணம் உள்ளதா என தேடி பார்த்துள்ளான். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த திருடன அங்கு தூங்கி கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி ஓடியுள்ளான். பின்னர் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த இளம்பெண் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் பெண்ணை பலாத்காரம் செய்த அந்த மர்ம திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்