இன்போஸிஸ் 9வது மாடியில் இளம் சாப்ட்வேர் இன்ஜினியர் கழுத்து நெருக்கப்பட்டு மர்மான முறையில் மரணம்!!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (11:10 IST)
புனேவில் இயங்கிவரும் ஐடி நிறுவனமான இன்போஸிஸ் கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


 
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜ். 25 வயதான இவர் புனேவின் ஹிஞ்ஜேவாடியில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜியாரக பணிபுரிந்து வந்தார்.
 
விடுமுறை நாளான நேற்று மிச்சமிருந்த சில வேலைகளை செய்வதற்காக அலுவலகத்துக்கு சென்றுள்ளார். நேற்றிரவு அலுவலகத்துக்குள் சென்ற பாதுகாவலர் கான்ப்ரன்ஸ் ரூமில் ரசிலா மயக்கநிலையில் கிடைப்பதைக் கண்டு மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் துறையினர் இளம் பெண் உயிரிழந்த இன்போஸிஸ் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். 
 
முதற்கட்ட விசாரணையில் அவரது கழுத்து ஒயரால் நெரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
அடுத்த கட்டுரையில்