”மோடி இல்லையெனில் ஜல்லிக்கட்டு நடைபெற்று இருக்காது” - பொன்னார் புது தகவல்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (11:08 IST)
பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு இல்லை. ஜல்லிக்கட்டுக்காக நான் செய்த முயற்சிகள் தான் பலன் தந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.


 

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் செய்தியளார்களை சந்தித்தபோது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ”மோடி இல்லை எனில் ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்காது.  பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு இல்லை. ஜல்லிக்கட்டுக்காக நான் செய்த முயற்சிகள் தான் பலன் தந்துள்ளது

மாணவர்கள் போராட்டம்தான் இதற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது. விரும்பத்தகாத சக்திகள் மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்தியுள்ளன. பீட்டாவையும், விலங்குகள் நலவாரியத்தையும் நெறிப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.

மேலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு புதிய முதல்வர் சரியாகத்தான் செயல்படுகிறார் என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்