யோகி ஆதித்யநாத்தின் தந்தை மரணம்! இறுதிச் சடங்கில் பங்கேற்காத மகன்!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (15:50 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை மறைந்துள்ள நிலையில் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளப் போவதில்லை என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் கூட்டம் சேரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த், இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள போவதில்லை என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்