யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் மாதம் ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதனால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஒருசிலர் சுதாரித்து இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே கோடிக்கணக்கான பணத்தை எடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் நேற்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக யெஸ் வங்கி நிறுவனர் ரானாகபூர் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்த சோதனைக்கு பின்னர் விசாரணைக்காக ரானாகபூரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல மணி நேரமாக அவரிடம் விசாரணை செய்ததாகவும், விடிய விடிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது