இதே போன்று, கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சௌதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கைது நடவடிக்கை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்ததாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அரசரின் தம்பி இளவரசர் அகமது பின் அப்துல்அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த உறவினர் இளவரசர் நவாஃப் பின் நயீப் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.