கால்பந்து வீரரான ரொனால்டினோ பராகுவே நாட்டுக்கு தனது வாழ்க்கை சரித புத்தகத்தைப் பிரபலபடுத்துவதற்காக சென்றார். அங்கு அவர் தங்கிய ஹோட்டலில் போலீஸார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட் ஒன்றில் அவரை பராகுவே குடிமகன் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததால் அவரைக் கைது செய்தனர். இது உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய மீன் பண்ணை ஒன்றின் மீதான மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது ஏன் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அவரது பாஸ்போர்ட்டில் பராகுவே குடிமகன் என எவ்வாறு பதிக்கப்பட்டு இருந்தது எனக் கேள்வி எழுப்பிய போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ரொனால்டினோவின் வழக்கறிஞர், ’பராகுவே விமான நிலையத்தில் இறங்கிய ரொனால்டினோவுக்கு ரசிகர் ஒருவர் அன்பளிப்பாக அளித்த பாஸ்போர்ட் அது’ என்று கூறியுள்ளார். இந்த செய்தி உண்மையா அல்லது பாஸ்போர்ட் மோசடியில் ரொனால்டினோ ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.