தவளையா இருந்தாலும் பையன் பொண்ண ஏமாத்தும் போல.... வைரல் வீடியோ!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (09:53 IST)
பெண் தவளைகளை கவருவதற்காக ஆண் தவளைகள் நிறம் மாறியுள்ளது வீடியோவாக வைரலாகி வருகிறது. 
 
வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற தவளைகளின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவோடு மழைக்காலம் என்பதால் பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் நிறம் மாறி இருக்கின்றன என எழுதியும் உள்ளார். 
 
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் இது போல அதிக மஞ்சள் நிற தவளைகள் காணப்படுகின்றன. இதோ இந்த வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்