சாத்தான்குளம் வழக்கு: தனித்தனி அறையில் ஐவரிடமும் தீவிர விசாரணை

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (09:49 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியது
 
இந்த வழக்கை தானாக எடுத்து முன் வந்த மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் 5 காவல்துறையினர்களையும் பின்னர் அடுத்ததாக 5 காவல்துறையினர்களையும் கைதுசெய்தனர் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கு சிபிஐ இடம் கைமாறியது என்பதும் அவர்கள் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உள்ளது. இதனை அடுத்து தற்போது சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. 
காவலர் முத்துராஜ் ஒரு அறையிலும், மற்றவர்களை வேறொரு அறையில் வைத்து விசாரணை செய்யப்படுவதாகவும், காவலர் முத்துராஜை நேற்று சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் உண்மையை அறிய தங்களது பாணியில் வியூகம் வகுக்கும் சிபிஐ முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மற்றவர்களிடம் விசாரணை செய்து வருகிறது என்பதும், நள்ளிரவு 3 மணி வரை முத்துராஜிடம் விசாரணை நடந்ததாகவும், காலை முதல் மற்ற 4 பேரிடம் தனித்தனி அறையில் விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்