கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முக்கிய ஐடி நிறுவனங்களின் வொர்க் ப்ரம் ஹோம் என்ற பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது டிசம்பர் 31 வரை வொர்க் ப்ரம் ஹோம் நீடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஐ மற்றும் பிபிஓ நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நிறுவனங்களின் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் பணி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இம்மாதம் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் அதன் பின்னர் அலுவலகம் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
ஆனால் நாடு முழுவதும் உள்ள சில முக்கிய ஐடி நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் பணி செய்ய வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய தகவல் தொழில் துறை அறிவித்துள்ளது.
இந்த தகவலை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அலுவலகம் வந்தே தீரவேண்டும் என்ற ஊழியர்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும் என்பதும் மற்றவர்கள் வொர்க் ப்ரம் ஹோம் வரை டிசம்பர் வரை செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது